கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணாமாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தற்போது துபாயில் நடக்கும் என உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா பேசும்போது நான் எப்பொழுதும் கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை அணியில் உள்ள மற்ற வீரர்களின் செயல்பாடுகளே முக்கியம். மேலும் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும். இந்தியாவை விட வெயிலின் தாக்கம் அங்கு அதிகமாகவே இருக்கும் என்பதை நான் உணர்வேன். ஆனால் போதுமான காலஅவகாசம் இருப்பதால் அவசரப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.