பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிளாஸ்மா சிகிச்சை என்பது சோதனைக்குரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதர அமைப்பு அதுவே முடிவானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்மா சிகிச்சை அவசரகால பயன்பாடு என்று அறிவித்தது. ஆனால் பிளாஸ்மா திரவம் மூலம் சிகிச்சை அளிப்பது முடிவான விஷயம் அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.