வியர்வையால் உடலில் அதிகளவு அழுக்கு தேங்கி இருக்கா? இதை க்ளீன் செய்வது ரொம்ப ஈஸி!!
உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறி சருமத்தில் அழுக்கு சேர்ந்து ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்தும்.அக்குள்,தொடை,கழுத்து,முதுகு உள்ளிட்ட இடங்களில் தான் அதிகளவு அழுக்கு படியும்.
குளித்தாலும் இவை உடலில் இருந்து வெளியேறுவதில்லை.இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும்.உடலில் தேங்கிய அழுக்குகளால் அதிகளவு அரிப்பு ஏற்படும்.இதனால் பொதுவெளியில் தர்ம சங்கடமான சூழலை உண்டாகி விடும்.
உடலில் தேங்கிய அழுக்குகளை வெளியேற்ற அதிக செலவு செய்வதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிமையான முறையில் வெளியற்றுங்கள்.
எலுமிச்சம் பழ தோலை ஸ்க்ரப்பர் போன்று பயன்படுத்தி உடலை தேய்த்து குளிப்பதன் மூலம் அழுக்குகளை வெளியேற்றலாம்.
பிளாஸ்டிக் குளியல் நாரை விட நுரைபீர்க்கன் என்று அழைக்கப்படும் காயில் இருந்து கிடைக்க கூடிய நாற்றை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.அது மட்டுமின்றி சருமம் மிருதுவாக காணத் தொடங்கும்.
உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பதன் மூலம் தேங்கிய அழுக்குகளை வெளியேற்ற முடியும்.சோப்பிற்கு பதில் கடலை மாவு,பச்சை பயறு மாவை உடலிற்கு தேய்த்து குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.
மேலும் உடலில் தேங்கிய அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.ப்ரஸ் கற்றாழை ஜெல்லை உடலில் பூசி குளிப்பதன் மூலம் அழுக்குகளை வெளியேற்ற முடியும்.உடலுக்கு சோப் பயன்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் அழுக்குகளை வெளியேற்ற முடியும்.