இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

Photo of author

By CineDesk

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங் தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும்.

அதில் இன்று இரவு பத்து மணியளவில் உங்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும், மின்சார பில்லை கட்டவில்லை என்றும், மேலும் விவரங்களுக்கு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துவிடுவார்கள்.

நீங்கள் பதறி உடனடியாக அந்த நம்பருக்கு அழைத்து காரணத்தை கேட்பீர்கள். அவர்கள் நீங்கள் மின்சார தொகையை கட்டவில்லை என்று கூறுவார்கள். ஒருவேளை நீங்கள் கட்டி இருந்தால் ஆதார் கார்டை இதனுடன் நீங்கள் இணைக்கவில்லை என்று கூறுவார்கள்.

இதனையடுத்து நீங்கள் உடனடியாக அவர்கள் சொல்வதை கேட்டு team viewer support என்ற செயலியை பதிவிறக்கம் செய்வீர்கள். இந்த டீம் வியூவர் என்பது ஸ்கிரீன் ஷேரிங் செயலி.

இதில் நாம் என்ன செய்தாலும் அது எதிரில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடும். இப்போது அந்த செயலியின் உள்ளே சென்று இபி வெப்சைட்டுக்கு சென்று அதில் 10 ரூபாய் கட்டணம் செலுத்துங்கள் என்று கூறுவார்கள்.

அப்படி நீங்கள் செலுத்தும் போது உங்களின் வங்கி எண், பாஸ்வேர்டு அனைத்தையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதனால் உங்கள் வங்கியில் உள்ள அனைத்து தொகைகளையும் அவர்கள் திருடி விடுவார்கள்.

இப்படி ஒருவேளை நீங்கள் ஏமாந்து விட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைத்து கூறி விட்டால் அவர்கள் உங்கள் பணத்தை வேறு வங்கிக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்க முடியும்.

இவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைலேந்திர பாபு தனது வீடியோவில் கூறி உள்ளார். மேலும் இது போன்று அழைப்புகள் வந்தால் அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மக்கள் அனைவரும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.