தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!!

0
212
New Scheme in Central Co-operative Banks in Tamil Nadu!! Dramatic change!!
New Scheme in Central Co-operative Banks in Tamil Nadu!! Dramatic change!!

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!!

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்களில் புதிதாக மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய சேவை மேம்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும்.

இந்த கூட்டுறவு வங்கிகள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றது.இது சமானிய மக்களின் நலன் கருதி பல சேவைகளை மையமாக வைத்து செயல்படுகிறது.இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் நகை கடன் ,பயிர் கடன்  போன்றவை வழங்கப்படுகின்றது.

அதனால் மற்ற வங்கிகளை போல இந்த கூட்டுறவு வங்கிகளில் மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 23 கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றது.இவை அனைத்திலும் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்.இனி வங்கிகளுக்கு இடைய பியர் டு பியர் மற்றும் வணிகர் பரிவர்த்தனை இவையெல்லாம்  மொபைல் மூலமாகவே செய்ய முடியும்.

இதனால் இரண்டு கணக்குகளுக்கு இடைய உள்ள பண பரிவர்த்தனை மிகவும் எளிதாகிவிடும். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் யாரும் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.அவர்களின் மொபைல்போன் மூலமாகவே ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும்.

கோர் பேங்கிங் வசதிகளுடன் கூடிய கூட்டுறவு வங்கிகள்  வேகமாக முன்னேறி வருகின்றது. கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர், தேசிய வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளிலும் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்போவதால் இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் இதன் மூலம் விவசாயிகள் பருவகால பயிர் கடன் பெற்று வருகின்றனர்.இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலமாக அதிக நேரம் வேகமாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நிதி பரிவர்த்தனை தொடர்பாக  முறைகேடு எதுவும் பெரிய அளவில் நடைபெறாது என்று கூறினார்.

author avatar
Parthipan K