அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

0
971
Does Vijay know as much as Annamalai..?? Controversy sparked by actress Aarti's speech..!!
Does Vijay know as much as Annamalai..?? Controversy sparked by actress Aarti's speech..!!

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

 தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ். முன்னதாக அதிமுகவில் இருந்த ஆர்த்தி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்த்தி பாஜகவில் சேர்ந்தது முதல் அண்ணாமலை குறித்து புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட கலைஞர் போன்ற திறமையானவர் அண்ணாமலை, கலைஞர் ஐயா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அண்ணாமலையை தான் அவரின் அரசியல் வாரிசாக அறிவித்திருப்பார் என்று கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்து பேசி இருந்தார். 

இந்நிலையில் தற்போது விஜய் குறித்து பேசிய ஆர்த்தி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி ஆர்த்தி கூறியதாவது. “நடிகர் விஜய் சினிமாவில் தனக்கு இருக்கும் நம்பர் ஒன் விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது தையரிமான முடிவு தான். இருப்பினும் அண்ணாமலை அளவிற்கு நடிகர் விஜய்க்கு அரசியல் அறிவு உள்ளதா என்று தெரியவில்லை. 

மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தமிழக முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை தான். அதுமட்டுமல்ல அண்ணாமலை வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய அளவிற்கு ஆற்றல் உள்ளவர். அவர் தமைலை ஏற்ற பின்னர் தான் தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது” என கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!
Next articleஎங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!