குளித்த பின்னரும் உடலில் வியர்வை நாற்றம் வீசுகிறதா? அப்போ இந்த 5 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடல் மணக்கும்!!
கோடை காலத்தில் உடல் அதிகளவு வியர்ப்பதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்திய குறிப்பு கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப்
2)ஆவாரம் பூ – 1 கப்
3)மகிழம் பூ – 1 கப்
4)செண்பகப் பூ – 1 கப்
5)மரிக்கொழுந்து – 1 கப்
செய்முறை:-
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு காட்டன் துணியில் போட்டு வெயிலில் போட்டு நன்கு காய வைத்துக் கொள்ளவும்.
மொரு மொரு பதத்திற்கு வரும் வரை காய விட்டு அரைக்க வேண்டும்.அதற்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் இந்த காய வைத்த பொருட்களை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும்.பிறகு அதில் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்டை உடல் முழுவதும் பூசி குளித்தால் உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றம்கட்டுப்படும் .