வீட்டு டாய்லெட்டில் ஒரே துர்நாற்றமா வீசுகிறதா? அப்போ 2 பல் பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள் மணக்க தொடங்கி விடும்!!

0
102
#image_title

வீட்டு டாய்லெட்டில் ஒரே துர்நாற்றமா வீசுகிறதா? அப்போ 2 பல் பூண்டை இப்படி பயன்படுத்தி
பாருங்கள் மணக்க தொடங்கி விடும்!!

நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதை போல் டாய்லெட்டையும் சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். டாய்லெட்டில் மஞ்சள் கறை படிந்திருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அவற்றை பயன்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும். இப்படி படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் மற்றும் துர்நாற்றம் நீங்க ககீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை பூண்டு – 2 பல்(பெரிய சைஸ்)

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதில் 2 அல்லது 3வெள்ளை பூண்டு பற்களை இடித்து சேர்க்கவும். பூண்டு வாசனை தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த தண்ணீரை 10 முதல் 15 நிமிடத்திற்கு ஆற விடவும். பின்னர் டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும் இடங்களில் ஊற்றி ஒரு இரவு முழுவதும் விடவும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் எப்பொழுதும் போல் டாய்லெட்டை சுத்தம் செய்தால் வீசிய கடுமையான வாடை முழுவதும் நீங்கி விடும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 2 பற்கள்

செய்முறை:-

2 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும் இடங்களில் போடவும். இதை ஒரு இரவு முழுவதும் விடவும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் தண்ணீர் கொண்டு சுத்தம் டாய்லெட்டை சுத்தம் செய்தால் துர்நாற்றம் மட்டுமல்ல விடாப்பிடியான மஞ்சள் கறைகளும் நீங்கி விடும்.

Previous articleஇப்படி செய்தால் ஒரு எலி கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு தரும் எளிய வழிகள் இதோ!!
Next articleCoconut Rava Upma – கேரளா ஸ்டைலில் தேங்காய் ரவா உப்புமா செய்வது எப்படி?