TUNCK CLEANER பயன்படுத்தியும் உங்கள் நாக்கில் WHITE LAYER படிந்துள்ளதா? இதை சுலபமாக நீக்க இந்த டிப்ஸ் உதவும்!!

Photo of author

By Divya

TUNCK CLEANER பயன்படுத்தியும் உங்கள் நாக்கில் WHITE LAYER படிந்துள்ளதா? இதை சுலபமாக நீக்க இந்த டிப்ஸ் உதவும்!!

உங்களில் பலரது நாக்கில் வெள்ளையாக படிந்திருக்கும்.இதை வெள்ளை படலம் என்று அழைக்கிறார்கள்.இவை வாயில் இருக்கின்ற கிருமிகளால் உருவாகிறது.அது மட்டுமின்றி உணவு சாப்பிட்ட பின்னர் வாயை நன்கு சுத்தம் செய்யவில்லை என்றால் இந்த வெள்ளை படலம் உருவாகும்.

இந்த வெள்ளை படலத்தை TUNCK CLEANER பயன்படுத்தி சுத்தம் செய்தாலும் அவை எளிதில் நீங்காது.நாக்கில் அதிகளவு வெள்ளை படலம் சேர்வதால் அவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.நாக்கில் தொடர்ந்து வெள்ளை படலம் சேர்ந்தால் அவை வெண்புள்ளி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நாக்கில் வெள்ளை படலம் உருவாக காரணங்கள்:-

1)நீர் வறட்சி

2)மருந்து,மாத்திரை உட்கொள்ளுதல்

3)நாக்கு அலர்ஜி

4)காரமான உணவுகள்

5)மது,புகை பழக்கம்

எனவே நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலத்தை எளிதில் நீக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

டிப் 01:-

உப்பு கலந்த வெது வெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து வந்தால் நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம் நீங்கும்.

டிப் 02:-

கிளிசரினை பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்தால் வெள்ளை படலம் முழுமையாக நீங்கும்.அது மட்டுமின்றி கிளிசரினை பயன்படுத்தி வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் வெண்மையாகும்.

டிப் 03:-

தினமும் காலை உணவிற்கு முன்னர் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் பற்களை துலக்க வேண்டும்.டங்க் க்ளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோல் மது மற்றும் புகை பழக்கத்திற்கு பின்னர் வாயை நன்கு ககழுவ வேண்டும்.நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.