இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!
அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளது. அதன்படி 35 கிலோவுக்கு அதிகம் எடையுள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை ஊழியர்கள் வீடு தேடி வந்து பார்சலை எடுத்துச் சென்று அதில் உள்ள முகவரிக்கு கொண்டு சென்று சேர்ப்பார்கள். இந்த பார்சல் சேவை பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் கொண்டு சேர்க்கப்படும். இந்த சேவைக்கு முதல் ஒரு கிலோமீட்டருக்கு ஜிஎஸ்டி வரி உள்பட ஆறு ரூபாய் வாங்க வேண்டும்.அதனை அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா இரண்டு ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்யப்படும். மேலும் ராணிப்பேட்டையில் இருந்து கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திருமானூருக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டது.
அந்த பார்சல் திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டு டிசம்பர் எட்டாம் தேதி அங்கிருந்து அரியலூர் திருமானூரில் உள்ள முகவரியில் சேர்க்கப்பட்டது. ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து 100 கிலோ முதல் ஒரு டன் வரையிலான பார்சல் சேவையை செய்து வருகின்றது. பார்சல் சேவைக்கு அஞ்சலக உதவி இயக்குனர், சென்னை மண்டல அஞ்சல் அலுவலகம், அண்ணா சாலை,சென்னை என்ற முகவரியிலும், 044-28594761, 28594762 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 9444975512 என்ற கைபேசி எண் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.