பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
212
Pongal bonus for part-time teachers!! Important information released by the Tamil Nadu government!
Pongal bonus for part-time teachers!! Important information released by the Tamil Nadu government!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழக அரசிடம் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை நிரந்தர பணி நியமனம் செய்யுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது வரை அது பற்றி பரிந்துரை செய்யாமலே உள்ளது.

இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்சி தலைவர்களும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மற்றும் அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்பொழுது தமிழக அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் விதமாக 221 கோடியை ஒதுக்கி உள்ளது.

இந்த பொங்கல் போனஸ் ஆனது அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் 2012 ஆம் ஆண்டுக்குப் பின் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த பொங்கல் போனஸ் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கி வரும் நிலையில் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மட்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படாது என்று கூறியது. மற்ற ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த பொங்கல் போனஸ் குறித்து 17 ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருப்பதாவது, முதல்வர் அவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும் அவர்களுக்கான பணி மாறுதலும் வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து அதனை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது போல இந்த பொங்கல் போனஸ் குறித்தும் முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இது குறித்த முதல்வரிடம் டிசம்பர் 15ஆம் தேதி முதலில் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த வேலையில் முதல்வர் இதனை காலதாமதம் செய்யாமல் உடனடியாக பொங்கல் போனஸ் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதை ஒட்டி எண்ணற்ற அறிக்கைகளை வெளியிட்டது. அதில் ஒன்றுதான் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது ஆகும். தற்பொழுது அது முழுமையாக செயல்பாட்டிற்கு வந்திருந்தால் இந்த போனஸ் மற்றும் ஊதிய உயர்வு குறித்து எந்த ஒரு பிரச்சனையும் எழுந்திருக்காது என தெரிவித்தார்.