தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்!

0
133
#image_title

தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்!

பொதுவாக நாம் காலையில் தூங்கி எழுந்தவும் வயிறு காலியாக இருக்கும். அப்போது, நாம் வெறும் வயிற்றில் ஏதாவது சாப்பிடக்கூடாத உணவு சாப்பிட்டு விட்டால்,  அன்றைய நாள் முழுவதும் நம்மை  பாதித்துவிடும்.

வெறும் வயிற்றில் உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும். ஆரோக்கியமான உணவுகள் பல இருக்கின்றன. அவற்றை நாம் சரியான நேரத்தில் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது முக்கியம்.  அப்படி சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக‌ தேவையில்லாத நோய்கள் வரவழைத்து விடும். சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே, மருத்துவர்களின் கணிப்பு படி நாம் காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம் –

வாழைப்பழம்

காலையில் நாம் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், அவை நம் உடலில் கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வை உண்டு செய்து விடும். எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தயிர்

காலையில் நாம் வெறும் வயிற்றில் தயிரை சாப்பிடக்கூடாது. ஏனென்றால், தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும் அவை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்துவிடும். இதனால், வயிறு உப்புசமாகிவிடும்.

காரம்

காலையில் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி நாம் காரணமாக உணவுகளை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

டீ, காபி

காலையில் நாம் வெறும் வயிற்றில் டீ, காபியை குடிக்கக்கூடாது. ஏனென்றால், டீ, காபியில் காப்ஃபைன் இருப்பதால், அவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்று படலத்தைப் பாதித்துவிடும்.

இனிப்பு

காலையில் நாம் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் அவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்திவிடும். மேலும், பசியை தூண்டும். காலையிலேயே கொழுப்பு பொருட்களை சாப்பிட்டால் பசி உணர்வை கட்டுப்படுத்திவிடும்.

மாத்திரைகள்

நாம் காலையில் மாத்திரைகளை  வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனென்றால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரித்துவிடும். அதோடுமட்டுமல்லாமல், உடலில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிவிடும்.

குளிர்பானம்

காலையில் நாம் வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால், அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். செரிமானத்தை தாமதமாக்கி, சளியை உண்டாக்கிவிடும். காலையில் கோல்டு காஃபி, ஐஸ் டீ ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது.

பழச்சாறு

வெறும் வயிற்றில் நாம் பழச்சாற்றை பருகக்கூடாது. அவை, வயிற்றில் சுமையை ஏற்படுத்திவிடும். மேலும், பழங்களில் உள்ள சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவித்துவிடும்.

Previous articleதித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க..
Next articleஇடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?