இன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!

Photo of author

By Vijay

மகாலட்சுமி வீடு தேடி வரும் நாளான வெள்ளிக்கிழமைகளுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நாளில் முழுவதுமே அம்மனின் துதிபாடி அமைதியாக இருப்பது நல்லது. மேலும் கோவிலுக்கு சென்று தொழுவது சிறப்பாகும்.

மேலும், வெள்ளிக்கிழமைகளில் செய்யவே கூடாத சில விஷயங்கள் உண்டு. அவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நமது வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக அமர்ந்திருக்கும் என்பது நம்பிக்கை. இது காலம் காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நம்மிடம் செல்வம் வருவதற்கும் நிரந்தரமாக நம்மிடையே தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களை கடைப்பிடித்து வரவேண்டும். பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகளில் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால் லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடும் என்பது ஐதீகம்.

அதேபோல நாம் வசிக்கும் இல்லம் எந்த அளவிற்கு தூய்மையாகவும் மங்களகரமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு லட்சுமியின் அருளும் நம்முடைய இல்லத்தில் நிறைந்திருக்கும்.

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்று நமது முன்னோர்கள் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்துள்ளார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் மறந்தும் கூட செய்து விடாதீர்கள்.

அப்படி உங்களுக்கு தெரியாமலேயே இதையெல்லாம் நீங்கள் இதுநாள்வரையில் செய்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனை கலங்களுக்கு இருந்திருக்கலாம். எவ்வளவு சம்பாதித்தாலும் பொருள் வீட்டில் தங்குவது இல்லை.

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது கூடாது. மேலும், பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகிய இரண்டையும் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கு வைத்த பிறகு தலை வாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யவே கூடாது.

அதேபோல், காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கை ஏற்றக்கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது.

துண்டை கட்டிக்கொண்டு, துண்டை தோளில் போட்டுக்கொண்டு ஈர ஆடைகளுடன் சாமி கும்பிட கூடாது.

தேங்காயை பூஜைக்கு படைக்கும்போது உடைக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்க கூடாது.

இயற்கை பூக்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்தக்கூடாது.