பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும்.

பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்யுங்கள்.கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள முருகனை அலங்கரித்து நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யுங்கள்.

இந்த பங்குனி உத்திர நன்னாளில் உங்களது குலதெய்வத்தை அவசியம் வணங்க வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை மறந்தால் குலதெய்வ சாபம் வந்து சேரும்.

பங்குனி உத்திர நாளான இன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த பொருட்களை படையல் இட்டு வணங்கவும்.குலதெய்வ கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள குலதெய்வத்திற்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் போட்டு உங்களுடைய கஷ்டங்களை கூறி மனம் உருகி வேண்டிக் கொள்ளவும்.