உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!

0
151
#image_title

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!

பற்களில் கறை படிந்து விட்டால் அவை பல் அழகை மட்டும் அல்ல முக அழகையும் சேர்த்து கெடுத்து விடும்.பற்களில் மஞ்சள் கறை ஏற்பட முறையாக பல் துலக்காமல் இருத்தல்,உணவு சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறை நீங்கி பளபளப்பாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்
3)பட்டை
4)எலுமிச்சை சாறு
5)சோடா உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பிரஷ் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு துண்டு பட்டையை அரைத்து கற்றாழை ஜெல்லில் கலந்து விடவும்.

பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை ப்ரஷில் வைத்து பற்களை தேய்க்கவும்.இவ்வாறு செய்வதால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பால் போல் வெண்மையாக காட்சியளிக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)தூள் உப்பு
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை ப்ரஷில் வைத்து பற்களை தேய்க்கவும்.இவ்வாறு செய்வதால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பால் போல் வெண்மையாக காட்சியளிக்கும்.