தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!
தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
நம் வீட்டில் பயன்படுத்திய தொடப்பத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் மகாலட்சுமியை சேர்த்து கொடுப்பது போல் என கூறப்படுகின்றது . இவ்வாறு செய்வதன் மூலம் பண கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள். அவ்வாறு அன்னத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்றால் புதிய அன்னத்தை மட்டுமே கொடுக்க வேண்டும்.
பழைய சாதத்தை ஒருபொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. கூர்மை கொண்ட கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவை குடும்பத்தில் கஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. அவற்றை தானமாக கொடுத்தால் நமக்கு தீமை உண்டாகும். மேலும் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.
அதனையடுத்து நம் வீட்டின் பூஜையறையில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தானமாக வழங்க கூடாது. கிழிந்த ஆடைகளை தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு கிழிந்த ஆடையை நாம் தானமாக கொடுக்கும் பொழுது தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் எப்பொழுதும் நல்ல ஆடைகளை மட்டுமே தானமாக வழங்க வேண்டும். நாம் தானம் கொடுப்பதே நமக்கு புண்ணியம் வந்து சேர வேண்டும் என்பதற்காக தான் மேலும் மன நிம்மதி பெறுவதற்காக தான். அவ்வாறு கொடுக்கும் பொழுது மேலே கூறியுள்ள பொருட்களை தவிர்த்து விட்டால் நன்மை உண்டாகும்.