காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!
அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும்.
நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் நீண்டநேரம் பல் துலக்குவதால் ஈறுகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாயின் காலை எழுந்த உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிருங்கள். இவ்வாறு பிடிப்பது வழக்கமாக புகை பிடிப்பதை விட அதிக கேடு தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை நேரத்தில் ஒரு சிலருக்கு தலைச்சுற்று ஏற்படும். எனவே அவர்கள் முடிந்தவரை டீ, காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். லெமன் டீ அல்லது கிரீன் டீ போன்றவைகளையும் மருத்துவர்களின் பரிந்துரையோடு குடிக்கலாம்.
மேலும் ஒரு சிலர் தானாகவே சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வர். அது போன்று செய்யாமல் உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
தற்போது உள்ள வேலை பளு மற்றும் கால தாமதமாக போன்ற காரணத்தால் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால் காலை உணவை முடிந்தவரை
எடுத்துக்கொள்ளுங்கள்.
நீண்ட நேர குளியல் உடலுக்கு ஆபத்தானது. ஒரு சிலர் குளிக்கச் சென்றாலே நீண்ட நேரம் கழித்து தான் வெளியே வருவார்கள் இது உடலுக்கு ஏற்றதல்ல.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். காலையில் இனிமையான இசையை ரசித்துக்கொண்டே உங்கள் வேலைகளை செய்வதால் காலையில் ஏற்படும் மன அழுத்தம் குறையும் மேலும் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.