இத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?

0
128

உலகில் சுமார் 463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணையம் வழி கல்வி பெறும் வசதியில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 147 மில்லியன் பிள்ளைகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் இணையம் வழி கல்வி பெற மாற்றுவழி தயார்ப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு இணைய வசதி அல்லது சாதனங்கள் இல்லாமல் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

463 மில்லியன் பிள்ளைகள் படிப்பில் பின்தங்கியதால் உலகக் கல்வியில் நெருக்கடிநிலை உருவாகியிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு வருங்காலத்தில் பொருளியல், சமுதாயப் பாதிப்புகளை உண்டாக்கும் என்று நிறுவனம் கூறியது. பள்ளிகள் மூடப்பட்டதால் 1.5 பில்லியன் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். படிப்பு வசதி இல்லாத பிள்ளைகள் மீண்டும் கல்வி கற்பதற்குப் பள்ளிகள் உதவவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

Previous articleமின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி!
Next articleபாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரிலீஸ்!! கைல தம்முடன் கெத்தாக போஸ் கொடுத்த பிரபல நடிகை!!