இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!
படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.
இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை நடத்தப்பட உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் தங்களுக்கான நபர்களை நேர்முகத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோரை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் கலந்து கொள்ள 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ள விரும்பும் நபர்கள் தங்கள் புகைப்படம், கல்வி சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.