இனி ஷாம்பு வேண்டாம் இரண்டு பொருள் போதும் முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்!

Photo of author

By Kowsalya

இன்றும் பலரும் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மார்க்கெட்டில் எத்தனையோ பல விதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் வந்துவிட்டன. அதனை நாம் பயன்படுத்தும் பொழுது நமது முடி உதிர்வு அதிகரிக்கும். அதே போல முடி உடைந்து விடும். அது போல நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இரண்டே பொருட்களை பயன்படுத்தி நம் வீட்டில் இயற்கையான தீர்வு ஒன்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. ஒற்றை இதழ் செம்பருத்தி- 4

2. வெந்தயம்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 100 மில்லி தண்ணீர் ஊற்றவும்.

2. செம்பருத்தியை காம்பை நீக்கிவிட்டு இதழ்களை பிரித்து போடவும்.

3. ஒரு ஸ்பூன் வெந்தயம் போடவும்.

4. அடுப்பில் வைத்து 100 மில்லி தண்ணீர் 75 மில்லி வரும்வரை சுண்டக் காய்ச்சவும்.

5. பின் வடிகட்டி அந்த நீரை எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

தலையில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதாவது ஒன்றை லேசாக தேய்த்து விடவும்.

பின் நன்கு ஆற வைத்து அந்த தண்ணீரை உங்களது வேர்கால்களில் நன்கு படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்துவிடவும்.

அரை மணி நேரம் கழித்து தலையை அலசி விடவும். வாரத்தில் இரண்டு முறை இந்த முறையைப் பயன்படுத்தவும்.

இதனை தொடர்ந்து நீங்கள் செய்து வரும் போது உங்களது முடி மிகவும் மென்மையாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.