சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா?
திமுகவில் உள்ளவர்கள் யாரும் சனாதனம் குறித்து எந்தவித கருத்தையும் பொது இடங்களில் தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உரிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது இ.ந்.தி.யா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக கட்சி சனாதன ஒழிப்பு குறித்து ஏதும் பேசினால் கூட்டணியில் உள்ள மத்த கட்சி மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் முக.ஸ்டாலின் அவர்கள் இந்த முடிவஎ எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறப்படுகிறது.
தற்போது சனாதான ஒழிப்பு குறித்தும், சனாதனம் எதிர்ப்பு குறித்தும் சனாதனம் என்றால் என்ன? என்பது குறித்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு கருத்துகள் செல்லப்பட்டு வருகிறது. பத்திரிக்கை, ஊடகங்களில் கூட சனாதனம் விவாத பொருளாக மாறிவிட்டது.
தற்போது சனாதனத்திற்கு எதிராக பேசிய உதவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் சார்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் “ஆம்ஆத்மி” கட்சியின் டெல்லி அமைச்சர் ஒருவர் கூட்டணியில் உள்ள ஒருவர் சனாதனம் குறித்து பேசியதற்கு இந்திய கூட்டணி பொறுப்பேற்க முடியாது என்று கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலானோர் சனாதனத்தை ஆதரிப்பது குறிப்பிடுகிறது. முக்கியமாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி சனாதனத்தை காக்கும் கட்சியாக திகழ்கிறது. இப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுக சனாதனம் எதிர்ப்பு என்ன? சனாதனம் குறித்து பேசவே தற்போது தவிர்த்து வருகிறது.