உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என இனி கவலை வேண்டாம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் அதாவது சிறிய வங்கி மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூல் செய்யப்படும்.
மேலும் எப்போது வங்கி கணக்கில் பணம் ஏறுகின்றதோ அப்போதெல்லாம் இஎம்ஐ போன்ற பல்வேறு காரணங்களுக்காக பணம் மொத்தமும் செலவாகிவிடும். இவ்வாறு இருக்கும் நிலையில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கு அபராதம் பிடித்தம் செய்வது என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுவதை வங்கிகள் நிறுத்தி கொள்ளலாம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வங்கிகளின் இயக்குனர் குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் வங்கிகள் சுதந்திரமாக செயல்படும் அமைப்பு என்பதால் மினிமம் பேலன்ஸ் போன்றவைகளுக்காக அபராதம் வசூல் மற்றும் அதனை ரத்து செய்வது குறித்து வங்கிகள் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையெனில் அபராத தொகை விதிக்கப்படவில்லை என்றால் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.