மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

0
298

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், லில்லி தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன் வழக்கறிஞரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில்,தான் பணியாற்றும் பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர். நாங்கள் மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம், நான் மட்டும்தான் பெண் ஆசிரியை. பள்ளி தலைமை ஆசிரியர் தினமும் பள்ளிக்கு தாமதமாக தான் வருவார்,லேப் அசிஸ்டன்டாக பணியாற்றும் பெண்ணும் தலைமை ஆசிரியருக்கு மிக நெருக்கம். இருவரும் லேட்டாகத்தான் வருவார்கள்.நான் ஒருநாள் லேட்டாக பள்ளிக்கு சென்றபோது என்னை கடுமையாக தலைமை ஆசிரியர் திட்டினார். நான், ஏன் எனக்கு மட்டும்தான் நேரம் காலம் பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது, என் மீது கோபமடைந்தார். மேலும் ஆசிரியர் தினத்தன்று மாணவ, மாணவிகளிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர். 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலாகியுள்ளது. ஏற்கனவே 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பார்ட்டி கொடுத்ததாக அவரது பெற்றோர் பள்ளிக்கு வந்து சண்டை போட்டார். அதில், இருந்து நாங்கள் எந்த பார்ட்டியும் நடத்துவதில்லை. இதில் தலைமை ஆசிரியர் பணம் வசூல் செய்திருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை.

எங்களது பள்ளியில் மோகன்தாஸ் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார், அவருக்கு சரியாக கண் தெரியாது. அவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கூறினார். அவருக்கு ஆதரவாக நான், ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்று கேட்டதால் என்னையும் இந்த வழக்கில் சேர்த்து விட்டனர்.

மோகன் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை நான் கண்டுக்காமல் விட்டதாகவும் கூறி எப்ஐஆரில் என் பெயரை சேர்த்துவிட்டனர். நான் விடுப்பில் இருந்தபோது மோகன்தாஸை போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல் அறிந்தேன். தலைமை ஆசிரியர் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்தியுள்ளார். அவர் அறைக்கு அடிக்கடி மாணவிகள் செல்வார்கள். அப்போது கதவு, ஜன்னலை மூடிவிடுவார்கள். உள்ளே என்ன நடக்கும் என்றே தெரியாது” என ஆசிரியை லில்லி வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.

வழக்கறிஞர், வழக்கு விசாரணையில் இருப்பதால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானதும் வேறொரு பள்ளிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அந்த வழக்கறிஞர் அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், கடைசியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?
Next articleரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here