Breakup Dorabujji! செருப்பால் அடித்த வீட்டார்கள்!

Photo of author

By Kowsalya

சமூக வலைத்தளங்களில் இரண்டு பெண்கள் டோரா புஜ்ஜி என்ற பெயரில் ஹரி மற்றும் தேச ராணி ஆகிய இருவர்கள் இணைந்த லிவிங் டு கெதர் இல் இருந்து வந்தார்கள். இருவரும் பெண்கள் என்றாலும் இருவர்களுக்கு இடையே இருந்த காதல் பேசும் பொருளாக மாறினாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் இன்ஸ்டாகிராம்களிலும் youtube களிலும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்கள்.

 

அப்படி போய்க் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருவர்களுக்கும் பிரேக்கப் என்று சொல்லப்படுகிறது. இது தேச ராணி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் சொல்லும் உண்மைகள் திடுக்கிடவே செய்கின்றது.

 

என்னதான் இருவர்களும் பெண்களாக இருந்தாலும் தேச ராணி ஹரியை நான் நம்புகிறேன். அவர் என்னை கைவிட மாட்டார் என்று சொல்லித்தான் இருவரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டனர். ஆனால் இருவர்களுக்கும் இப்பொழுது காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேச ராணி அழுது கொண்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

 

அதில் ஹரி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கே தெரியாமல் பல காரியங்களை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

 

இவர்கள் நடத்தி வரும் சேனலுக்கு பிரமோஷனுக்காக நிறைய பணம் கொடுப்பார்கள். அப்படி அனைத்தையும் ஹரியை தான் பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார் தேசராணி. அப்படி கொடுக்கல் வாங்கல் பணத்தை ஏமாற்றி இருக்கிறார் ஹரி. அதன் பிறகு அவரது வங்கி கணக்கை பார்த்தபோதுதான் புரிந்தது என்று தேசராணி சொல்லி இருக்கிறார்.

 

மேலும் தேச ராணி பேசுகையில், ஹரி போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் எவ்வளவோ முறை தடுத்தும் அந்த பழக்கத்திலிருந்து அவள் விடுபடவில்லை என்று சொல்லி உள்ளார். இதைப்பற்றி அவர்களது வீட்டில் பொய் சொன்னால் அந்த வீட்டில் இருக்கும் அவரது அக்கா தேச ராணியை செருப்பால் அடித்துவிட்டார் என்று கதறி அழுத்திருக்கிறார்.

 

மேலும் இவர்கள் சமீபத்தில் ஒரு கார் வாங்கி இருக்கிறார்கள். அந்த காருக்கு தேசராணி மட்டுமே 5 லட்சம் கொடுத்துள்ளார். அந்த ஐந்து லட்சத்தில் 3 லட்சம் மட்டும் காருக்கு கட்டிவிட்டு, மீதி இரண்டு லட்சத்தை ஹரி ஏமாற்றி இருக்கிறார். இதனால் அங்கிருந்து அவருக்கு EMI கட்ட சொல்லி தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கிறது.

 

மேலும் இதைப் பற்றி எல்லாம் கேட்டு அவரிடம் சண்டையிட்டு காதல் முறிவு செய்து கொள்ளலாம் என்று சொன்ன பொழுது, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தேச ராணியின் பெயரை மற்றும் மொபைல் நம்பரை விபச்சாரி , இந்த எண்ணிற்கு அழைத்தால் உங்களுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று சொல்லி பதிவிட்டு இருக்கிறார். அதனால் பல தொந்தரவுகள் வந்து கொண்டிருக்கிறது என கதறியலும் வீடியோ போட்டு உள்ளார்.

 

இனியும் பொறுக்க முடியாது இதனை சமூக வலைதளங்களில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டேன். மேலும், எனக்கு மனது பாரமாக இருக்கிறது. அதை உங்களிடம் சொன்னால் எனக்கு ஒரு தெம்பு கிடைக்கும் என்பதற்காக தான் இன்று இந்த வீடியோவை வெளியிட்டேன் என முடித்திருக்கிறார்.