புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

0
288
#image_title

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

கடந்த இரு வாரங்களுக்கு முன் வட தமிழக்தை மிக்ஜாம் புயல் ஒரு பதம் பார்த்து விட்டு ஓய்ந்தது. இந்த புயலின் தாக்கத்தில் இருந்து வட தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்பொழுது தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருகிறது.

கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விடாது மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர் நிலைகள் மளமளவென நிரம்பி வருகிறது. பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் இருக்கின்றனர். சென்னையின் நிலை தற்பொழுது இந்த 4 மாவட்டங்களில் ஏற்பட்டு இருக்கிறது.

புயல் உருவாகாமலே தென் தமிழக்தில் வரலாறு காணாத மழை பெய்ய காரணம் தான் என்ன?

தற்பொழுது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இவை அவ்விடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் நிலவி வருவதால் தான் கடலுக்கு அருகில் உள்ள நிலப்பரப்புகளில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.