நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Photo of author

By Parthipan K

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Parthipan K

Downsizing will begin tomorrow! Some procedures change in Twitter management!

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் அவர் மேலதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார் என டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75சதவீதம் அளவுக்கு குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கையின் மூலம் இரண்டாயிரமாக குறைக்கப்படும்.

மேலும் டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.மேலும் புளூஸ்கை என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.