கூகுள் நிறுவனத்தில் 4 மாத ஊதியத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை! அதிருப்தியில் ஊழியர்கள்!
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில்.அண்மையில் பேஸ்புக்,அமேசான்,டுவிட்டர்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடிவு செய்யப்பட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.நடப்பாண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என அச்சம் அதிகரித்துள்ளது,பல்வேறு நிறுவனங்கள் முதல் ஸ்டார் அப் நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மாஸ்க் முதலில் டுவிட்டரில் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டார்.அந்த வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார்.அதுபோலவே அமேசான் நிறுவனமும் திடீரென 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.அதனைத்தொடர்ந்து பேஸ்புக்,மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.அந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அது குறித்து கூகுள் தலைமை அதிகாரி கூறுகையில் இது நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய நேரம்.வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் 16 வாரங்களுக்கான ஊதியம் அதாவது நான்கு மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிவித்திருந்தநிலை கூகுள் நிறுவனம் இந்த முடிவு எடுத்துள்ளது பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.