மொசாம்பிக் நாட்டில் 50பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை வெறி தாக்குதலை நடத்தி வருகிறது. அமருலா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில் இருந்து தப்பி வெளியேறிய போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தியது. அதுமட்டுமின்றி பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மா-வில் நூறு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பகுதி மக்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட 1,400 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, மிகப்பெரிய கொடூரத்தையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அமைப்பு அரங்கேற்றியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட தெரிவில் பலரது தலை துண்டிக்கப்பட்டு உடல்களாக கிடப்பதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இந்த பால்மா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக அறியப்படுகிறது.