உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!

0
89

சமீபத்தில் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு டிடிவி தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடையே இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு அவரை அரசியலில் இருந்து விலகி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் அதிமுக தலைமையோ சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை.

இருந்தாலும் சசிகலாவின் என்னமோ வேறுமாதிரியாக இருந்தது. தான் அதிமுகவில் சேரவில்லை என்றாலும் கவலை இல்லை ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததாக சொல்கிறார்கள்.அதோடு அவர் தினகரன் கூட கட்சியை கலைத்துவிட்டு ஒதுங்கி விடுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு சம்மதம் தெரிவிக்காத டிடிவி தினகரன் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சமீபகாலமாக ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வழிபட்டு வரும் சசிகலா நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதேபோல மதுரைவீரன் சாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு மதுரையில் தங்கியிருக்கிறார் சசிகலா.இந்தநிலையில், நேற்று காலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவருடன் பல விஐபி களும் சென்றிருக்கிறார்கள்.

சசிகலாவுடன் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் வந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் தொகுதி மகேந்திரன், டேவிட் அண்ணாதுரை உசிலம்பட்டி தொகுதி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான மருது சேனை சங்கத்தின் வேட்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.அதோடு சசிகலா இப்படி ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் களம் காணும் தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தான் என்று சொல்கிறார்கள்.