சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

Photo of author

By Parthipan K

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

Parthipan K

Updated on:

லெபனானில் நடந்தது போன்ற வெடி விபத்து சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருக்கதாக டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைப்பற்றி இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.

அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! என்று கூறியுள்ளார்.