இளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!

Photo of author

By Jayachandiran

இளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!

Jayachandiran

Updated on:

இளைஞருடன் டிக்டாக் செய்து கர்ப்பமான இளம்பெண் தர்ணா! நாடக காதலன் தலைமறைவு! போலீசார் தேடுதல் வேட்டை.!!

பொழுதுபோக்காக இளம்பெண்ணுடன் டிக்டாக் செய்து கர்ப்பமாக்கிவிட்டு நாடக காதலன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர், தாசியப்பனூர் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவருடன் இணைந்து நீண்ட நாட்களாக பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கில் அறிமுகமாகி ஜோடியாக நடித்துள்ளனர். நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர்.

இணையத்திற்கு அடிமையான அகிலாவிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய தொடங்கினர். இதனிடையே ஸ்ரீதருடன் சேர்ந்து அகிலா சென்னைக்கு ஓடிப்போய் அங்கு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் அகிலா மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

அகிலா கர்ப்பமான செய்தியை கேட்டு நாடக காதலன் ஸ்ரீதர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீதரின் குடும்பத்தினரிடம் அகிலா நடந்ததை கூறியுள்ளார். தற்போது அவர்களும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் அகிலா தனக்கு ஏற்பட்ட அவமானத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசாரை அணுக எண்ணினார்.

இதனையடுத்து, திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் அகிலா இதுகுறித்து புகார் தெரிவித்தார். பின்னர் நாடக காதலன் ஸ்ரீதர் வீட்டுக்கு சென்று வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அம்பலூர் போலீசார் ஸ்ரீதரை அழைத்து வருவதாக பேச்சுவார்த்தை நடத்தி அகிலாவை சமாதானப்படுத்தினர். காதலியை திட்டமிட்டு கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய ஸ்ரீதரையும், அவரது குடும்பத்தையும் போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் காதலால் பல பெண்கள் ஏமாந்து பெற்றோரை அவமதித்து கடைசியில் காவல்நிலையம் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.