பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் ஆசையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் அடுப்பில் சமைக்க மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என அடிமைப் படுத்திய தடைகளை தவிர்த்து விட்டு இன்று பிள்ளை பெறும் எங்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என பெண்கள் நிருபித்துக் கொண்டு வருகின்றனர்.

அனைத்து துறைகளில் பெண்கள் சாதித்தாலும் கடவுள் என வருகையில் மட்டும் பெண்கள் தோற்றுக் கொண்டே வருகின்றனர். விமானத்தை இயக்கினாலும்,விண்வெளிக்குச் சென்றாலும் ஏனோ அவர்களால் நுழைய முடியாத இடங்களாக கோவில் கருவறைகள் திகழ்ந்து வருகின்றன என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.  பெண் கடவுள்கள் வீற்றிருக்கும் கோவில்களிலும் இதே நிலைதான் தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து அவர் கூறுகையில் அந்த நிலை இனிமேல் இல்லை.பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திராவிட மாடல் ஆட்சி களைந்துள்ளது. எனவே கரு சுமக்கும் பெண்களும் இனிமேல் கருவறைக்குள் என அவர் பதிவிட்டுள்ளார். அதன்படி இனிமேல் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்  என முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார்.

எனவே இனிமேல் கோவில் கருவறைகளிலும் ஒலிக்க போகுது பெண்களின் குரல்.