உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

Photo of author

By Parthipan K

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

சாப்பிட்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.
அன்றாடம் வாழ்வில் நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட்ட பின்பு உடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றது. இதன் காரணமாக நாம் உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீர் அருந்த வேண்டும்.

இதன் விளைவாக உணவு செரிமானம் ஆவதற்கு நன்கு உதவும். புற்றுநோய் உருவாக்கும் செல்களை அழித்து மற்றும் கெட்ட கொழுப்புகளையும் தடுக்க உதவுகிறது.இதனுடன் புற்றுநோய் வராதவாறு தடுக்க உதவுகிறது.

பெரும்பாலும் உணவு உட்கொண்டதற்கு பிறகு குளிர்ச்சியான நீரை எடுத்துக் கொள்வார்கள் இதன் விளைவாக உணவில் இருக்கக்கூடிய எண்ணெய் துகள்கள் கெட்டியான நிலையை அடைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனையை உருவாக்க கூடும்.

கெட்ட கொழுப்புகளின் அளவையும் அதிகரிக்கிறது எனவே உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தி வருவதன் காரணமாக பல விதமான நன்மைகள் நம் உடலுக்கு ஏற்படும். உணவு எடுத்துக்கொண்ட பின் சுடுதண்ணி அருந்துவது நல்லதாகும்.