உங்கள் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

0
167
Drink a glass of this to get rid of the toxic waste accumulated in your liver!!
Drink a glass of this to get rid of the toxic waste accumulated in your liver!!

உங்கள் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட்
2)பீட்ரூட்
3)தக்காளி
4)இஞ்சி
5)கொத்தமல்லி தழை

செய்முறை:-

ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கவும்.அதேபோல் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய கேரட்,பீட்ரூட்,தக்காளி மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டுக் கொள்ளவும்.பின்னர் சிறிது கொத்தமல்லி தழை எடுத்து பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.

இறுதியாக ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட்
2)ஆப்பிள்
3)வெள்ளரிக்காய்
4)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு ஆப்பிள் பழத்தை விதை மற்றும் தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய வெள்ளரிக்காய்,பீட்ரூட்,ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.