இப்படி கூடவா காப்பி அடிப்பீங்க…. அட்லீயை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

0
39
#image_title

இப்படி கூடவா காப்பி அடிப்பீங்க.. அட்லீயை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி. இவர் ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இப்படம் அட்லீக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால், அடுத்த படங்களை இயக்க தயாரானார். இவர் விஜய் கூட நெருக்கமானதால், அட்லீக்கு ஜாக்பாட் அடித்தது. அட்லீ இயக்கும் அடுத்தடுத்த படங்களில் விஜய் நடிக்க ஒப்பந்தமானார்.

இதனையடுத்து, அட்லீ இயக்கத்தில் விஜய் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை நடித்தார். இந்த 3 படங்களுமே அட்லீக்கு வெற்றியை தேடி கொடுத்து தமிழ் சினிமாவில்  4 படங்களிலேயே நட்சத்திர இயக்குநராக மாறிவிட்டார்.

தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோனே உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் இரு வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. ஆனால், அட்லீ எடுக்கும் அனைத்து படங்களுமே காப்பி, பேஸ்ட் என்று நமக்கே தெளிவாக தெரியும். சரி ‘ஜவான்’ படம் கூட ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்றால், இந்தப் படமும் காப்பி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு படத்தையும் நினைவுப்படுத்துகிறதாகவும், அது என்ன போன மாதம் வந்த ‘ஜெய்லர்’ படம் பார்த்த மாதிரி இருக்கிறது என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கிண்லடித்துள்ளனர்.

வழக்கம் போல் நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிப்பு அசத்தலாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

author avatar
Gayathri