கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!!

0
51
#image_title

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!!

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் கேரளா தமிழகம் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் நோய் பரவலை மையமாக வைத்து மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வைரஸ் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது.

2018ம் ஆண்டில் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்து மீண்டும் பரவாதபடி கேரள அரசு நடவடிக்கை எடுத்து நோய் தொற்றை அழித்து. இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கேரளா மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஏற்படாத வகையில் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்வதற்காக முகாமிட்டுள்ளனர்.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேரளா-தமிழ்நாடு எல்லை பகுதியான ஒன்பதாறு பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர பரிசோனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தமிழக சுகாதாரத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உள்ளதா இல்லையா என்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் “தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. நிபா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை என்றாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. நிபா வைரஸ் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என்று கூறினர்.