காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!
அரைக்க முடியாத செ ரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது.
அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதற்கு காரணம் துரித உணவுகள், மற்றும் காரமான உணவுகள், . அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. துத்தி இலை 5
2. கறி மஞ்சள் சிறு துண்டு
3. பசும்பால்
செய்முறை:
1. முதலில் துத்தி இலையை எடுத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பின் கரிமஞ்சள் சிறுதுண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. இரண்டையும் அம்மியில் வைத்து சிறிதளவு நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
4. இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு பசும்பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. பால் கொதித்ததும் அதை ஒரு டம்ளரில் ஊற்றி ஆரம்பிக்கவும்.
6. வெதுவெதுப்பாக இருக்கும் பசும்பாலில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கரைத்து குடிக்கலாம்.
இதை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வரும் பொழுது உங்களுக்கு ஆசனவாயில் ஏற்பட்ட புண்ணும் சரி மூலத்தினால் ஏற்பட்ட புண்ணும் சரி உடனடியாக போய்விடும்.