காலையில் இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உங்க கல்லீரல் பெருங்குடல் சுத்தமாகும்! 

Photo of author

By Amutha

காலையில் இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உங்க கல்லீரல் பெருங்குடல் சுத்தமாகும்! 

கடைகளில் விற்கப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்படும் இந்த பானங்களை குடிப்பது உங்கள் உடல் எடையை குறைப்பதோடு பெருங்குடல் கல்லீரல் முதலியவை சுத்தமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை அறவே தடுக்கும்.

* இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள் ஆளி விதைகள். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பெருங்கடலில் உள்ள நச்சுக்களை நீக்கி புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. இதய நோய் வராமல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

* அடுத்து எடுத்துக் கொள்ளும் பொருள் சியா விதைகள். இதில் நார்ச்சத்து உள்ளதோடு உயர்தர புரதம் உள்ளது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

ஒரு மிக்ஸங் பவுல் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் ஆளி விதை மற்றும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்க்கவும். இதை இரவு முழுவதும் ஊற விட வேண்டும். ஆப்பிள் ஒன்றை எடுத்து நன்கு கழுவி துண்டாக நறுக்கவும்.

நறுக்கிய ஆப்பிளை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.ஒரு டம்ளரில் ஊற வைத்த ஆளி விதை மற்றும் சியா விதைகளை போட்டு அதில் அரைத்த ஆப்பிள் ஜூசை சேர்க்கவும்.  இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர  கல்லீரலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு நன்கு இயங்கும்.  உடல் எடையை குறைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.