உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த ஒரு ஜூஸ் போதும்!!
வாழைப்பழத்தை போன்றே வாழைதண்டும் பல நன்மைகளை கொண்டுள்ளது. இந்த வாழைத்தண்டானது பல வித நோய்களை சரி செய்யக் கூடியது. வாழைத்தண்டு ஜூஸ் எப்படி செய்வது, வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் என்ன பயன்கள் மற்றும் எந்தெந்த நோய்களை சரி செய்கிறது என பார்க்கலாம்.
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை
மிக்ஸியில் வாழைத்தண்டை கட் செய்து போடவும். அதில் ஊப்பு, மிளகு, சீரகம், தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி குடிக்கவும்.
சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் குறைந்த பட்சமாக வாரம் ஒரு முறை வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும். அதேபோல் வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு ஆகியவை வெளியேறும்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அவர்கள் இந்த வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் அதிகப்படியான உதிரப்போக்கு குறையும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நெஞ்செரிச்சல் அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
அதிக உடல் எடை கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் சாப்பிட்டு வந்தால், பசி உணர்வு எடுக்காமல் இருப்பதோடு, கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.
வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிடுவதால் மலச்சிக்கல் உடனடியாக சரியாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றையும் சரி செய்கிறது.