வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

0
238
#image_title

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய நன்மைகளை தரக்கூடிய கஞ்சியை தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம்.

ஒரு கப் பார்லி அரிசியை எடுத்துக்கொண்டு அதை வறுக்கவும். இது சுமார் 100 கிராம் இருக்கும். இதில் அரை ஸ்பூன் மிளகு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

வறுப்பட்டதும் இறக்கி ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த பவுடரை காற்று போகாத ஒரு டப்பாவில் சேமித்து வைக்கவும். இது சுமார் 15 நாட்களுக்கு வரும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் இரண்டு பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி சேர்க்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த பார்லி பவுடரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும் இறக்கி ஆற விடவும்.

சூடு ஆறியதும் டம்ளரில் ஊற்றி பருகலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மட்டுமே நிறைய பலன்கள் தரும்.

இதைக் குடித்தால் கிடைக்கும் நன்மைகளாவன,

1. சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள்.

2. சிறிது நேரம் வேலை செய்தாலுமே அதிக மூச்சிரைப்பு உள்ளவர்கள்.

3. பித்தம் அதிகமானதால் ஏற்படும் உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள்.

போன்றவர்களுக்கு இந்த பார்லி கஞ்சி நல்லதொரு அருமருந்து.

அதேபோல் சில பேருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது அவர்கள் இந்த கஞ்சியை குடித்து வரலாம்.

பார்லி கஞ்சியை தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு உடம்பில் கொழுப்பு படியாமல் உடல் எடை குறைந்து கட்டுக்கோப்புடன் இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் இதய நோயாளிகளுக்கும் இந்த கஞ்சி மிகவும் நல்லது.

இதில் உள்ள நார்ச்சத்தானது நமக்கு குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். ஏற்கனவே வந்திருந்தாலும் அதன் பாதிப்புகளை குறைக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகள் பற்கள் ஆகியவற்றை உறுதியாக வைக்கும். வயதானவர்களுக்கு வரும் எலும்பு தேய்மானம், எலும்பு வலுவிழுத்தல் ஆகியவற்றை குறைக்கும். பித்தப்பையில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தும்.

இவ்வளவு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் பார்லிக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நமது ஆரோக்கியத்தின் நிலை மாறுபட்டு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

 

 

 

 

Previous articleஅனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்
Next articleபள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு!