நாளுக்கு நாள் கூடி வரும் உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த ட்ரிங்க்ஸ் குடிங்கள்!!
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.யாருக்கு எந்த நோய்,எந்த நேரத்தில் வரும் என்றே சொல்ல முடியாத மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உடல் எடை கூட முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்.உணவுக் கட்டுப்பாடு கொண்டு வந்தால் உடல் எடையை கட்டுக்குள் இருக்கும்.சிலர் உடற் பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.ஆனால் எல்லோராலும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை.
எனவே அதிக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றி வரவும்.உடல் எடையை குறைப்பதில் காய்கறிகள் மற்றும் கீரைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
*பீட்ரூட்
*கேரட்
இந்த இரண்டு கிழங்கையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
*வெந்தயக்கீரை
ஒரு கப் வெந்தயக்கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை கட்டுப்படும்.
*முருங்கை கீரை
ஒரு கப் முருங்கை கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை கட்டுப்படும்.