2 முறை மட்டும் இதனை குடியுங்கள்!! கிட்னியில் உள்ள கல்லை அசால்ட்டாக வெளியேற்றலாம்!!
சிறுநீரக கற்களால் பெண்களை விட ஆண்கள் தான் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். பெருமளவு தண்ணீர் குடிக்காத காரணத்தினாலும் உடல் சூட்டினாலும் இந்த சிறுநீரக கற்கள் உடலில் தேங்கி விடுகிறது. இதற்கு எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இன்றி எளிமையான முறையில் அகற்றலாம்.
அதேபோல சிறுநீரக கற்கள் இருப்பது கண்டறிந்து விட்டால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதுடன் உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் சித்த வைத்தியம் முறை.
தேவையான பொருட்கள்:
சிறுபீளை வேர்
சீரகம்
மாவிளங்க பட்டை
நெல்லிக்காய்
கடுக்காய்
தான்றிக்காய்
நெருஞ்சில்
சோம்பு
தனியா விதை
சதகுப்பை
இவை அனைத்தையும் தனி தனியாக 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அதில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
தண்ணீரானது ஒரு லிட்டர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
காலை மற்றும் மாலை என இரு வேலையும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேற்பட்ட கற்களும் வெளியேறிவிடும்.
அத்தோடு உணவுமுறை பழக்க வழக்கத்திலும் சிறிது மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.அந்தவகையில் அதிக காரம் நிறைந்த உணவுகள்,வெளி உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.