இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

Photo of author

By Kowsalya

நரம்பு பிரச்சனை என்பது அனைவருக்கும் இந்த காலத்தில் 50 வயதைத் தாண்டினாலே வந்துவிடுகிறது. நரம்பு சுருட்டல், ஒற்றை தலை வலி, கால் வீக்கம், மூளை பாதிப்புகள் வரை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.

நரம்பு வலியால் ஏற்படும் பாதிப்புகளின் வலியை விவரிக்க முடியாது.

ஆங்கில மருந்துகளால் குணப்படுத்தமுடியாத இந்த பிரச்சனையை இயற்கை முறை கொண்டே தீர்க்கும் நல்ல பலனை காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1. கருப்பு உளுந்து

2. மிளகு

3. தண்டுக்கீரை

4. மஞ்சள் தூள்

5. உப்பு

செய்முறை:

1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து உளுந்தை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

2. பின் அந்த உளுந்தை உரலில் போட்டு இடித்து கொள்ளவும். பின் அதனுடன் மிளகு 1/2 ஸ்பூன் சேர்த்து இடித்து கொள்ளவும்.

3. பிறகு தண்டு கீரையை ஒரு கைப்பிடி எடுத்து கழுவி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.

4. அடுப்பில் வைத்து அரைத்து வைத்த உளுந்து பொடியை போடவும் . பின் கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

5. 250மில்லி வரை சுண்ட காய வைக்கவும்.

6. வடிகட்டி டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம் . 2 வேளை குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 1 வாரம் குடித்து வாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள்.

ஆண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தி ஆண்மை குறைவு இல்லாமல் செய்யும் தன்மை கொண்டது.