ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார்.

இதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்றாராம்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்த இபிஎஸ்- ஐ பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வரவேற்றார். அப்போது தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக தங்களை தேர்ந்தெடுத்தற்காக அனைவரும் துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த சான்ஸை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தங்களது இல்லத்துக்கு வந்த முதல்வரிடம் ஆசியையும் வாழ்த்தையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.