உயர் இரத்த அழுத்தம்(BP): இதை ஜூஸ் குடித்து கூட உடனடியாக கட்டுப்படுபடுத்தலாம்!!
தற்பொழுது பலர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதியடைந்து வருகின்றனர்.உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்ள வேண்டும்.
கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்களில் பலர் பிபியை கட்டுப்படுத்த மருந்து மாத்திரை உட்கொண்டு வருவீர்கள்.ஆனால் இவை எதுவும் இல்லாமல் சுவையான பழச்சாறு குடித்து கூட உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
1)வாழைப்பழம்
ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் சிறிது ஐஸ்கட்டி மற்றும் சுவைக்காக சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
2)மாம்பழம்
அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் மாம்பழமும் ஒன்று.இதன் சதை பற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மாம்பழத்தில் பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் அதிகளவு நிறைந்து இருக்கிறது.
3)மாதுளம் பழம்
ஒரு கப் மாதுளை விதையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பிபி கட்டுப்படும்.