போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

0
136

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து மண்டலம் உள்ள நிலையில் அதில் விழுப்புரம்,கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை,திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு நடப்பாண்டு வெளியிட்டது.

அதன்படி சுமார் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் ww.arasubus.tn.gov.in என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.நடத்துநர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.கனரக வாகனம் இயக்குவதில் 18 மாதங்கள் அனுபவத்துடன் நடத்துநர் உரிமம் இருக்க வேண்டும்.ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வயது 24 முதல் 40க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு ,ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Previous articleஇனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!
Next articleட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!!