இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?!! ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களன்!!
முருங்கைக்காய், கீரை மற்றும் பூ எல்லாவற்றிலும் அதிக அளவிலான நார்ச்சத்துக்களும், இரும்பு சத்தும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால், முருங்கை கீரை சாப்பிட அதிகமாக கசக்கும் என்று அதனை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவோம்.
அத்துடன் முருங்கை இலையை பொடி செய்து கலந்து குடிப்பதால், அதில் உள்ள கசப்புத்தன்மை குறைந்துவிடும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மேலும் கூடுதல் நன்மைகளும் மனிதனுக்கு கிடைக்கும். உடலிலுள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றும்.
இதனை அடுத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோய் வராமல் தடுக்கிறது. இதய நோய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இது குறைக்கின்றது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் முருங்கை உடலின் எடையை குறைக்கும்.
முருங்கை டீ குடிக்கும்போது கொழுப்பு சேமிக்கபடுவதற்கு பதிலாக ஆற்றல் உற்பத்தி நடக்கிறது. முருங்கை இலைகளை உண்பதன் மூலமாக உடலுக்கு பல ஆரோக்கியத்தை அளிக்கிறது.குழந்தைகள் இதை உண்பதன் மூலமாக ஞாபக சக்தி அதிகரிக்கும். அத்துடன் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
மேலும், முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், புரதம், தாதுக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து போன்றவை இருக்கின்றன.
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும், பலமும் கூடும். பல் கெட்டிப்படும். நோய்கள் அனைத்தும் நீங்கும். முருங்கை டீயை குடிப்பதன் மூலமாக கலோரிகளின் அளவு குறைந்து ஊட்டச்சத்துக்கள் அதிகமாகும். கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.