அதிக பலன்களை தரும் உலர் பழங்கள்… இந்த உலர் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

Photo of author

By Sakthi

அதிக பலன்களை தரும் உலர் பழங்கள்… இந்த உலர் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்..

 

உலர் பழங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது உலர் திராட்சை தான். இந்த உலர் திராட்சையே அப்படியே சாப்பிட்டால் கிடைக்கும் பலனை விட தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும். அதிலும் கருப்பு உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

 

உலர் திராட்சை மட்டுமில்லாமல் பாதம், பிஸ்தா போன்று நிறைய வகையான உலர் பழங்கள் உள்ளன. இந்த உலர் பழங்களை நாம் சாப்பிடும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உலர் பழங்கள்…

 

* பாதம்

* முந்திரி

* பிஸ்தா

* ஆப்ரிகாட்ஸ்

* அத்திப்பழம்

* வால்நட்

* பேரிச்சம்பழம்

 

பாதாம்…

 

சர்க்கரை அதிகம் உள்ள திண்பண்டங்களுக்கு பதிலாக நாம் இந்த பாதாம் பருப்பை எடுத்துக் கெள்ளலாம். பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்டு சத்துகள் அதிகளவு இருக்கின்றது. பாதாமால் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கின்றது. இதனால் மலச்சிக்கல், இதயநோய், சுவாசப் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருகின்றது. பாதாம் நமது முடி, தோல், பற்கள் ஆகியவற்றிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

 

முந்திரி…

 

உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் முந்திரியில் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. முந்திரியில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளது. மேலும் முந்திரியில் நார்ச்சத்துக்கள், தாதுக்கள் அதிகளவில் உள்ளது. முந்திரி பலவகையான உணவுகளுக்கு சுவையை கூட்டுகின்றது.

 

பிஸ்தா…

 

பிஸ்தாவில் எந்த அளவிற்கு சுவை உள்ளதோ அதே அளவிற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளது. பிஸ்தா நம் உடல் ஆரோக்கியத்திற்கா தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகின்றது. பிஸ்தாவில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் உணவில் பிஸ்தாவை சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும். அது மட்டுமில்லாமல் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

 

ஆப்ரிகாட்ஸ்…

 

உலர்ந்த ஆப்ரிகாட்ஸ் நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. உலர்ந்த ஆப்ரிகாட்ஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், ஆக்சிஜனேற்ற பண்பு ஆகிய சத்துக்கள் உள்ளது. உலர்ந்த ஆப்ராகாட்ஸ் பழத்தை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் சரும ஆரோக்கியத்தையும் கண் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம்.

 

அத்திப் பழம்…

 

அத்திப்பழம் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் ஒன்று. அதுவும் உலர்ந்த அத்திப் பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமடையும். மேலும் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் எலும்புகளுக்கு அதிகளவில் பலத்தை கொடுக்கின்றது.

 

வால்நட்…

 

வால்நட் பருப்பு நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. வால்நட் பருப்பில் அத்தியாவசிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றங்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. வால்நட் பருப்பை சிற்றுண்டியாக சாப்பிடலாம். மேலும் சாலட், இனிப்புகளில் சேர்த்து வால்நட் பருப்பை சாப்பிடலாம்.

 

பேரிச்சம் பழம்…

 

பேரிச்சம் பழம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இனிப்பு உணவுகளில் முக்கியமான உணவு பொருளாக இருக்கும் பேரிச்சம் பழத்தில் புரதங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் பேரிச்சம் பழம் இயற்கை சர்க்கரையால் நிரம்பியுள்ளது. பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் குடல் எரிச்சல் போன்ற குடல் தொடர்பான நோய்கள் குணமடையும். மேலும் இரத்த சோகை நோய்க்கு பேரிச்சம்பழம் முக்கியமான மருந்து பொருளாக உள்ளது.