உலகமே கொலைகார கொரோனா தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை நகரில் இருந்து 177 கி.மீ தொலைவில் தென்கிழக்கே இன்று அதிகாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 44 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும், அது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இதனை கடலோர பகுதி மக்கள் உணரவில்லை என்றும் நிலநடுத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நாடு தெரிவிக்கிறது. மேலும் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிக்கப்பட்டது.
என்ன தான் அந்நாட்டு அரசு மக்களின் அச்சத்தை போக்கினாலும் கோரோனா பயத்தில் இருப்பவர்கள் இதை கேட்டு சுனாமியும் வந்துவிடுமோ என்று மேலும் பதற்றமடைந்துள்ளனர்.