திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

0
158

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலை விரிசலுடன் பிளந்து கொண்டன. இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டு, சுனாமியும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி வரவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

உலக வெப்பமயமாதல், பருவ மாற்றம் மற்றும் இயற்கை சீற்றங்களால் இதுபோன்ற திடீர் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்க ஹவாய் தீவிலும் சுனாமி வரலாம் என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை கொரோனா பாதிப்பு ஆக்கிரமித்த நிலையில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களும் உருவானால் உலகம் பேரழிவை சந்திக்க நேரலாம்.

இந்த ஆண்டின் தொடக்கமே பல்வேறு ஆபத்துடன் தொடர்ந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருமுறை சுனாமி வந்து பெரும் உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் தமிழகம் பேரிழப்பாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!!
Next articleரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!